‘கோல் இந்தியா’ நிறுவனத்தின் துணை நிறுவனமான ‘சென்ட்ரல் மைன் பிளானிங் அண்டு டிசைன் இன்ஸ்டிடியூட்’ நிறுவனம், வரும் மார்ச் 30ம் தேதி, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட உள்ளது.
ஐ.பி.ஓ., வாயிலாக இந்நிறுவனம் 1,842.12 கோடி ரூபாயை திரட்டியுள்ளது. பங்குச் சந்தையில் விற்பனை மனநிலை மேலோங்கியுள்ள நிலையில், இந்நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கு மொத்தமாக 1.05 மடங்கு மட்டுமே விண்ணப்பிக்கப்பட்டது. நிறுவன முதலீட்டாளர்கள் அதிக அளவில் விண்ணப்பித்திருந்தாலும், சிறு முதலீட்டாளர்களுக்கான பிரிவில் 33 சதவீத விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டன.
கடந்த 20 முதல் 24ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், ஒரு பங்கின் விலை 163 – 172 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜன., மாதம்தான், கோல் இந்தியா நிறுவனத்தின் மற்றொரு துணை நிறுவனமான ‘பாரத் கோக்கிங் கோல்’ நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
