சென்னை:தமிழகத்தில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 800 ரூபாய் குறைந்தது.
தமிழகத்தில் கடந்த சனிக் கிழமை, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 15,050 ரூபாய்க்கும், சவரன் 1,20,400 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 290 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
ஞாயிற்றுக் கிழமை தங்கம் சந்தைக்கு விடுமுறை; அன்று, முந்தைய நாள் விலையிலேயே ஆபரணங்கள் விற்பனையாகின. நேற்று தங்கம் விலை கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து, 14,950 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
சவரனுக்கு 800 ரூபாய் சரிவடைந்து, 1,19,600 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
