சென்னை:திமுகவில் அமைச்சர்களின் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பெபர்கள்

சென்னை:திமுகவில் அமைச்சர்களின் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பெபர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

திமுகவின் பொதுச் செயலாளர். மூத்த அமைச்சராக இருப்பவர் துரைமுருகன். நிருபர்களின் சந்திப்பில் இவர் அளிக்கும் பதில்கள் வைரல் ரகம். இவர் எம்எல்ஏவாக இருக்கும் காட்பாடி தொகுதியில் அதிமுகவின் கழக அமைப்புச் செயலாளரான வி. ராமு வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

ஆத்தூர் தொகுதி எம்எல்ஏவாகவும், அமைச்சராகவும் இருப்பவர் ஐ. பெரியசாமி. இவரின் தொகுதியில் அதிமுக வேட்பாளர் விஸ்வநாதன் போட்டியிடுகிறார். இவர் சித்தையன் கோட்டை பேரூராட்சியில் அதிமுக மாவட்ட பிரதிநிதியாக பொறுப்பு வகிக்கிறார்.

அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் குறிஞ்சிபாடி எம்எல்ஏவாக இருக்கிறார். இவரை எதிர்த்து அதிமுக வேட்பாளர் புவனேந்திரன் போட்டியிடுகிறார். இவர் அதிமுகவில் கடலூர் தேற்கு மாவட்ட மீனவர் பிரிவு செயலாளராக உள்ளார்.

அருப்புக்கோட்டை திமுக எம்எல்ஏவாக இருப்பவர் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன். இதே தொகுதியில் தற்போது அதிமுக வேட்பாளராக சேதுபதி அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர் அருப்புக்கோட்டை நகர அதிமுக செயலாளர்.

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திருமயம் தொகுதி திமுக எம்எல்ஏ. இவருக்கு எதிராக அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ வைரமுத்து களம் இறங்குகிறார். புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளராக உள்ளார்.

அமைச்சர் மு.பெ. சாமிநாதன் போட்டியிட்டு வென்ற காங்கேயம் தொகுதியில் அதிமுகவின் என்எஸ்என் நடராஜ் போட்டியிடுகிறார். இவர் முன்னாள் எம்எல்ஏ. தற்போது காங்கேயம் ஒன்றிய செயலாளராக இருக்கிறார்.

அமைச்சர் மூர்த்தி வெற்றி பெற்ற மதுரை கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாங்குளம் கே. மகேந்திரன் போட்டியிடுகிறார். இவர் அதிமுக வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.

அமைச்சர் கோவி செழியனை எதிர்த்து திருவிடைமருதூர் தொகுதியில் பெண் வேட்பாளர், முன்னாள் எம்எல்ஏ இளமதி சுப்ரமணியன் அறிவிக்கப்பட்டுள்ளார். தற்போது தலைமை செயற்குழு உறுப்பினராகவும், தஞ்சை மேற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளராகவும் பொறுப்பில் உள்ளார்.

அமைச்சர் ராஜ கண்ணப்பன் முதுகுளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றவர். இவரை எதிர்த்து அதிமுகவில் முன்னாள் எம்எல்ஏவும், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளருமான மலேசியா எஸ். பாண்டி களம் இறக்கப்பட்டு உள்ளார்.

அமைச்சர் மகேஸ் எம்எல்ஏவாக இருக்கும் திருவெறும்பூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்பியும், தற்போதைய திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான ப.குமார் போட்டியிடுகிறார்.

அமைச்சர் கயல்விழி செல்வராஜின் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமா போட்டியிடுகிறார். இவர் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட இணை செயலாளராக உள்ளார்.

Source link