தென் சென்னை பகுதி சினிமா ரசிகர்களுக்கு ஒரு செம்ம மாஸான செய்தி கிடைத்துள்ளது. கோயம்புத்தூரில் தியேட்டர் தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்திய முன்னணி நிறுவனமான கற்பகம் சினிமாஸ் (Karpagam Cinemas), தற்போது அதிகாரப்பூர்வமாக சென்னையில் காலடி எடுத்து வைக்கிறது.
சென்னை மேடவாக்கம் அருகே உள்ள சந்தோஷபுரத்தில் ரூபி எலைட் (Ruby Elite) கட்டிடத்திற்கு மிக அருகில் ஒரு புதிய 5-ஸ்கிரீன் மல்டிபிளக்ஸ் தியேட்டர் காம்ப்ளக்ஸை அவர்கள் மிக வேகமாக உருவாக்கி வருகிறார்கள்.
தியேட்டர் தொழில்நுட்பத்தில் புதிய புரட்சி!
சென்னையில் எத்தனையோ தியேட்டர்கள் இருந்தாலும், உலகத்தரம் வாய்ந்த பிரீமியம் லார்ஜ் ஃபார்மட் (PLF) மற்றும் அதிநவீன திரை வசதிகள் புறநகர் பகுதிகளில் ரொம்பவே குறைவுதான். இந்த குறையை போக்கத்தான் கற்பகம் சினிமாஸ் இந்த 5 திரைகள் கொண்ட மல்டிபிளக்ஸை கொண்டு வருகிறது.
கோயம்புத்தூரில் உள்ள தங்களது தியேட்டரில், இந்தியாவின் மிகப்பெரிய 4K HDR LED திரையை (EPIQ Luxon) அறிமுகப்படுத்தி எல்லாரையும் மிரள வைத்தனர். அதே போன்ற உலகத்தரம் வாய்ந்த ‘LED EPIQ’ அல்லது ‘EPIQ Luxon’ தொழில்நுட்பத் திரையை இந்த சென்னை தியேட்டரிலும் அவர்கள் கொண்டு வரவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தென் சென்னைவாசிகளுக்கு கொண்டாட்டம்!
மேடவாக்கம், சோழிங்கநல்லூர், தாம்பரம் மற்றும் வேளச்சேரி சுற்றியுள்ள பகுதி மக்கள், இனிமேல் தரமான விஷுவல்ஸ் மற்றும் சவுண்ட்டோடு படம் பார்க்க வேண்டும் என்றால் சிட்டிக்குள் இருக்கும் தியேட்டர்களுக்கு அலைந்து டிராஃபிக்கில் சிக்க வேண்டியதில்லை. தங்களது ஏரியாவிலேயே மிகச்சிறந்த தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸை இனி அவர்கள் பெற முடியும்.
இந்த தியேட்டரின் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதால், எப்போது திறப்பு விழா (Opening Date) நடக்கும் என்று சினிமா ரசிகர்கள் ரொம்பவே ஆர்வமாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
தியேட்டர் தொழில்நுட்பத்தில் மிரட்டும் ‘கற்பகம் சினிமாஸ்’ பின்னணி!
கோயம்புத்தூரில் தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்ற பெருமை’கார்பகம் சினிமாஸ்’ (Karpagam Theatres)நிறுவனத்தையே சேரும். காந்திபுரத்தில் கங்கா, யமுனா, காவேரி எனப் பாரம்பரிய திரைகளுடன் தொடங்கி, இன்று கோவை சினிமா ரசிகர்களின் ஆல்-டைம் ஃபேவரிட் ஸ்பாட்டாக இது விளங்குகிறது. மாஸ் ஹீரோக்களின் பட ரிலீஸின் போது திருவிழா போல நடக்கும் FDFS கொண்டாட்டங்களுக்கு இவர்களது தியேட்டர்கள் மிகவும் பெயர் பெற்றவை.
தொழில்நுட்பத்தில் எப்போதும் டாப் லெவலில் இருக்கும் இவர்கள், கோவையின் சுந்தராபுரத்தில்‘கார்பகம் கிராண்ட்ப்ளெக்ஸ்’என்ற பிரம்மாண்ட 5-ஸ்கிரீன் மல்டிபிளக்ஸை அமைத்துள்ளனர். இங்குதான் இந்தியாவின் மிகப்பெரிய 4K HDR அக்யூஸ்டிக்கலி டிரான்ஸ்பரன்ட் (Acoustically Transparent) LED திரையான’EPIQ Luxon’அறிமுகம் செய்யப்பட்டு, ஒட்டுமொத்த சினிமா உலகையே வியக்க வைத்தது.
டால்பி அட்மாஸ் சவுண்ட், லேசர் புரொஜெக்ஷன், சொகுசான சீட்டிங் வசதிகள் என மல்டிபிளக்ஸ் தரத்தை பட்ஜெட் விலையில் தருவதுதான் இவர்களின் தனிச்சிறப்பு. கோவையில் பிளாக்பஸ்டர் ஹிட்டான இதே உலகத்தரம் வாய்ந்த பிரீமியம் தியேட்டர் மாடலைத் தான், இப்போது சென்னை மேடவாக்கம் ரசிகர்களுக்காக அப்படியே கொண்டு வருகிறார்கள்.
