சென்னையில் இவ்வளவு வெள்ள நீரை உள்வாங்கிக்கொள்ளுமா சதுப்பு நிலம் – முதலமைச்சர் விஜய்க்கு அன்புமணி அலர்ட் – pmk leader anbumani writes letter to cm vijay reagrding ramsar wet land notification in chennai

சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாப்பதற்காக அதன் எல்லைகளை அறிவிக்கை செய்ய வேண்டும் எனவும், ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டத்தை வெளியிட வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். கிண்டி முதல் சிறுசேரி வரையிலும் 15,000 ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம், தொடர்ச்சியான ஆக்கிரமிப்புகள் காரணமாக இப்போது 1725 ஏக்கருக்கும் கீழாக சுருங்கிவிட்டதாக அன்புமணி வேதனை தெரிவித்துள்ளார்.

நிலைமை மாறவில்லை என்பது தான் வருத்தம்

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தொடர்பான சர்ச்சைகள், தங்களின் தலைமையிலான தவெக ஆட்சிஅமைந்த பிறகும் கூட, நிலைமை மாறவில்லை என்பது தான் வருத்தம் அளிப்பதாக அன்புமணி வேதனை தெரிவித்துள்ளார். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள பெருங்குடி குப்பைக் கிடங்கு அகற்றப்படும் என்பதால், அங்கு குப்பைகள் கொட்டப்படாது; துர்நாற்றம் குறையும். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் கலப்பது தடுக்கப்படும்; அதனால், சதுப்பு நிலத்தில் வாழும் பறவைகள், மீன்கள் ஆகியவற்றுக்கு ஏற்படும் தீமைகள் விலகும்.

தென்சென்னையின் வெள்ள சேதத்தை குறைக்கும் பள்ளிக்கரணை

பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் உள்ள 65 நீர்நிலைகள் தாக்கப்பகுதிக்குள் கொண்டு வரப்படும் என்பதால் அவை அனைத்தும் பாதுகாக்கப்படும். இதனால், தென் சென்னையின் வெள்ள சேதம் பெருமளவு குறைக்கப்படும். தென் சென்னையின் நிலத்தடி நீர்வளம் மேம்படும். கோடைக் காலத்தில் வெப்ப அலைகளின் தாக்கம் குறையும்.

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் உள்ள நீர்நிலைகள் தூய்மையானதாக மாறும் போது, வலசை பறவைகள் வருகை அதிகமாவதால் பள்ளிக்கரணை இயற்கை எழில்மிக்கதாக மாறும். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தையொட்டி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கட்டுமானத் தடைகள் நீக்கப்படும். இதனால், அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் நிம்மதி அடைவார்கள் என்றும்பாமக தலைவர் அன்புமணி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் இவ்வளவு நீரை உள்வாங்கிக்கொள்ளுமா?

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை எனும் குறலுக்கு ஏற்ப, பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ஆக்கிரமிப்பு, குப்பை மேடு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டுள்ள போதும் வெள்ள சேதத்தை குறைக்கும் முக்கியப்பங்காக தனது கடமையை ஆற்றி வருகிறது.

ஆம்., அடையாற்றின் முகத்துவாரமாகவும், உப்புநீர் உட்புகுதலை தடுக்கவும் இந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தென்சென்னை மக்களை இன்றளவும் காத்து வருகிறது. பல்லூயிர் பெருக்கத்தின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை மாசுபடுத்தாமல் பாதுகாப்பதே நம் அனைவருடைய கடமை என்றே சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Source link