சென்னையில் பள்ளிக் குழந்தைகள் ஜப்பானிய மொழி கற்க வாய்ப்பு

சென்னை: கோடை விடுமுறையில் பள்ளிக் குழந்தைகளுக்கு ஜப்​பானிய மொழி பயிற்சி அளிக்​க இந்​தி​ய – ஜப்​பான் தொழில் வர்த்தக சபை சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.

இது தொடர்​பாக, அதன் பொதுச்​செய​லா​ளர் சுகுணா ராமமூர்த்தி வெளியிட்டுள்ள செய்​திக் குறிப்​பு: இந்​தி​ய – ஜப்​பான் தொழில் வர்த்தக சபை​யின் மொழிப் பள்ளி, பள்ளி குழந்தைகளுக்கான ஜப்பான் மொழி பயிற்சியைத் தொடங்க உள்ளது. மொத்தம் 40 மணி நேரம் கொண்ட இந்த பயிற்சியில் 8 முதல் 17 வயது வரையுள்ள குழந்தைகள் சேரலாம்.

இந்த பயிற்சியானது, ஜப்பானிய மொழி பேச்சுப் பயிற்சி, ஜப்பானிய குழந்தைகளிடமிருந்து பாடங்களை அறிந்து கொள்வது, ஜப்பானிய மொழி எழுதுவது, பாடல்கள் படிப்பது, ஓரிகாமி, ஜப்பானிய விளையாட்டுகள் போன்றவை இடம்பெறும்.இதற்கான நேரடி வகுப்புகள் சென்னை – தேனாம்பேட்டை கே.பி.தாசன் சாலையில் அமைந்துள்ள இந்திய – ஜப்பான் தொழில் வர்த்தக சபை வளாகத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை நடைபெறும். வகுப்புகள் ஏப்ரல் மாதம் தொடங்குகின்றன. பயிற்சியின் நிறைவில் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்

Source link