கள்ளக்குறிச்சி சுற்றுவட்டாரத்தில் கனமழை
தமிழகத்தின் வடக்கு மற்றும் உள் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் கனமழை கொட்டி தீர்த்து கொண்டிருக்கிறது. குறிப்பாக கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருவம், ரிஷிவந்தியம், சங்கராபுரம், மூங்கில் துறைப்பட்டு, ஆலத்தூர், விருகாவூர், முடியனூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
