சென்னையில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்; கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம்

சென்னை: கல்லூரி மாணவி, மர்ம நபர்களால் கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியைச் சேர்ந்த 22 வயதான இளம்பெண் ஒருவர், கடந்த பிப்ரவரி 14ம் தேதி சென்னையில் தனியார் விடுதி ஒன்றில் தங்கி, கல்லூரி பிராஜெக்ட் பணிகளை மேற்கொண்டு வந்தார். சில நாட்களாக தொடர்ந்து அந்த மாணவியை நோட்டமிட்டு வந்த மர்ம கும்பல், அவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு, மார்பிங் செய்யப்பட்ட ஆபாச போட்டோக்களை அனுப்பியுள்ளனர்.

இதனை கண்டு அதிர்ந்து போன அந்த மாணவி சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்ட போது, ‘நாங்கள் சொல்வதை கேட்காவிட்டால், இந்தப் போட்டோக்களை இணையதளத்தில் கசிய விட்டு விடுவோம்,’ என்று மிரட்டியுள்ளனர்.

இதனால், பீதியடைந்த மாணவி, கடந்த மார்ச் 9ம் தேதி வெளியே செல்வதற்காக டாக்ஸி புக் செய்து விட்டு, விடுதி அருகே காத்து கொண்டிருந்துள்ளார். அப்போது, அங்கு காரில் வந்த மர்ம நபர்கள், மாணவியை வலுக்கட்டாயமாக காரில் இழுத்துச் சென்றுள்ளனர். செல்லும் வழியிலேயே மாணவியின் முகத்தில் மயக்கப் பொடியை தூவி மயக்கமடையச் செய்துள்ளனர். அதன்பிறகு, வேறு ஒரு இடத்தில் காரில் இருந்து மாணவியை இறக்கி விட்டு சென்றுள்ளனர்.

உடலில் காயம் மற்றும் அசவுகரிமயான நிலையை உணர்ந்த மாணவி மீட்கப்பட்டு, மறுநாள் அடையாறில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மாணவி அளித்த புகாரின் பேரில், அபிராமபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 நாட்களுக்கு முன் மதுராந்தகம் அருகே 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவமும், தூத்துக்குடியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவமும்,ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில், சென்னையிலும் இத்தகைய சம்பவம் நடந்திருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Source link