சென்னை அணியில் நோகுயரா * ஐ.எஸ்.எல்., தொடரில் ஒப்பந்தம்

சென்னை: சென்னை கால்பந்து அணியில் மத்திய கள வீரர் ஆல்பர்டோ நோகுயரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.,) தொடரில், நிறுத்தி வைக்கப்பட்ட 12வது சீசன், வரும் பிப். 14ல் துவங்குகிறது. சென்னை, மும்பை, மோகன் பகான் உட்பட 14 அணிகள் பங்கேற்க உள்ளன.

ஐ.எஸ்.எல்., தொடரில் இருமுறை கோப்பை வென்ற அணி சென்னை (2015, 2017-18), தனது முதல் போட்டியில் பிப். 19ல் மும்பை அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது.

கடந்த சீசனில் சென்னை அணியின் மத்திய கள பகுதி பலவீனமாக காணப்பட, 11 வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இதைப் பலப்படுத்தும் வகையில், ஸ்பெயினின் ஆல்பர்டோ நோகுயரா 36, குறுகிய கால அடிப்படையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஐ.எஸ்.எல்., தொடரில் கோவா, மும்பை, பெங்களூரு அணிகளுக்காக 98 போட்டியில் விளையாடிய அனுபவம் கொண்டவர். இதில் 14 கோல் அடித்த நோகுயரா, சக வீரர்கள் கோல் அடிக்க 17 முறை உதவினார்.

மத்திய களத்தின் மிக நம்பகமான வீரரான இவர், கடந்த சீசனில் பெங்களூரு அணியில் இடம் பெற்றிருந்தார். உலகின் பல்வேறு தொடர்களில் மொத்தம் 392 போட்டிகளில் பங்கேற்ற இவரது அனுபவம், இம்முறை சென்னைக்கு கைகொடுக்கும் என நம்பலாம்.

Source link