சென்னை: அண்ணா பல்கலையின் கீழ், பல்கலை வளாக கல்லுாரிகள், உறுப்பு கல்லுாரிகள், அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகள் உட்பட 350க்கும் அதிகமான கல்லுாரிகள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில், அண்ணா பல்கலையில், பி.எச்டி., மாணவர் சேர்க்கை துவங்கி உள்ளது. பல்கலை வளாகத்தில் 150; அரசு, உறுப்பு கல்லுாரிகளில் தலா 50 இடங்கள் என, மொத்தம் 250 பி.எச்டி., இடங்கள் உள்ளன.
பல்கலை வளாகத்தில், பி.எச்டி., படித்த மாணவர்களுக்கு, மாதம் 25,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வந்தது. இது, 50,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல், அரசு இன்ஜினியரிங் மற்றும் உறுப்பு கல்லுாரிகளில், முதல் முறையாக பி.எச்டி., மாணவர்களுக்கு 50,000 ரூபாய் ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்ஜி., தொழில் நுட்பம், மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளில், பி.எச்டி., சேர்க்கைக்காக, மாணவர்கள், https://cfr.annauniv.edu என்ற இணையதளத்தில் வரும் 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
