சென்னை : 'அதிகார வரம்பிற்கு உட்பட்ட அதிகாரிகள் பிறப்பிக்கும் உத்தரவுகளை மட்டுமே, பின்பற்ற வேண்டும்' என,

சென்னை : ‘அதிகார வரம்பிற்கு உட்பட்ட அதிகாரிகள் பிறப்பிக்கும் உத்தரவுகளை மட்டுமே, பின்பற்ற வேண்டும்’ என, போலீஸ் கமிஷனர்கள், மண்டல ஐ.ஜி.,க்கள் மற்றும் மாவட்ட எஸ்.பி.,க்களுக்கு டி.ஜி.பி., சந்தீப்ராய் ரத்தோட் உத்தரவிட்டுள்ளார்.

தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக, போலீஸ் கமிஷனர்கள், மண்டல ஐ.ஜி.,க்கள் மற்றும் மாவட்ட எஸ்.பி.,க்களுடன், ‘ஆன்லைன்’ வாயிலாக, டி.ஜி.பி., சந்தீப்ராய் ரத்தோட் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.

அப்போது, அவர் பிறப்பித்த உத்தரவு: மாநிலம் முழுதும், தேர்தல் நடத்தை விதிகள் முழுமையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். வி.ஐ.பி., தலைவர்கள் மாநிலம் முழுதும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு தேவையான பாதுகாப்புகளை அளிப்பது நம் கடமை. அதை உணர்ந்து, எலலோரும் பணியாற்ற வேண்டும். பணி மூப்பு அடிப்படையில், அதிகார வரம்பிற்கு உட்பட்ட, நேரடி அதிகாரிகள் பிறப்பிக்கும் உத்தரவுகளை மட்டுமே, பின்பற்ற வேண்டும்.

சில எஸ்.பி.,க்கள், பிற அதிகாரிகள் பிறப்பிக்கும் உத்தரவுகளை பின்பற்றுவதாக தகவல் வருகிறது. அதுபோன்ற செயலில் யாரும் ஈடுபடக்கூடாது. அவ்வாறு அதிகார வரம்பை மீறி, அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தால், அது குறித்து, சட்டம் ஒழுங்கு மற்றும் தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்கு தலைமை வகிக்கும் போலீஸ் அதிகாரிகள், எனக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

Source link