சென்னை: அனைத்து கட்சியின் வேட்பாளர்களுக்கும் சமமான பாதுகாப்பு வழங்க வேண்டும் என டிஜிபிக்கு தமிழக தேர்தல்

சென்னை: அனைத்து கட்சியின் வேட்பாளர்களுக்கும் சமமான பாதுகாப்பு வழங்க வேண்டும் என டிஜிபிக்கு தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டு உள்ளார்.

சென்னை கொளத்தூரில் பிரசாரத்தின் போது தேர்தல் விதிகளை மீறியதாக தவெக தலைவர் விஜய் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதற்கிடையே கொளத்தூரில் பிரசாரத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என விஜய் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம் கேட்டுள்ளார்.

இந்நிலையில் விஜய் பிரசாரத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என தவெக புகார் அளித்த நிலையில், டிஜிபிக்கு தமிழக தேர்தல் அதிகாரி அரச்சனா பட்நாயக் கடிதம் எழுதியுள்ளார். அவர், ”பிரசாரத்தில் பாதுகாப்பு தொடர்பான விதிகளை அனைவருக்கும் சமமாக அமல்படுத்த வேண்டும்.

அனைத்து கட்சியின் வேட்பாளர்களுக்கும் சமமான பாதுகாப்பு வழங்க வேண்டும். விஜய் பிரசாரத்தில் நடந்தது என்ன என்பது குறித்து சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டுள்ளோம்; பிரசாரத்தில் ஏற்பட்ட இடையூறுகள் தொடர்பான விபரங்களும் கோரப்பட்டுள்ளன” இவ்வாறு அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார்.

விண்ணப்பம்

ஹெலி​காப்டர் மற்​றும் ஹெலிபேட் அனு​மதி உள்பட, 13 அனு​ம​திகளுக்கு ‘சுவிதா’ இணையதளம் மூல​மாக 48 மணி நேரத்​துக்கு முன்​பாக விண்ணப்பிக்​கலாம் என தமிழக தேர்தல் அதி​காரி அர்ச்​சனா பட்நாயக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Source link