சென்னை அப்போலோ மருத்துவமனையில் ராமதாஸ் அனுமதி

சென்னை: சேலத்தில் பிரச்சாரத்தின் போது மயக்கமடைந்த பாமக நிறுவனர் ராமதாஸ் மேல்சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உடல்நலம் குறித்து விசாரித்தார்.

பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையே நிலவிவரும் உச்சக்கட்ட மோதல் போக்கால், கட்சியினர் இரு பிரிவுகளாக செயல்படுகின்றனர். கட்சியில் பெரும்பாலானோர் அன்புமணிக்கு ஆதரவாக இருப்பதால், கட்சியும், மாம்பழம் சின்னமும் அன்புமணி வசம் சென்றது.

அதிமுகவுடன் கூட்டணி வைத்த அன்புமணி, 18 இடங்களை பெற்று, வேட்பாளர்களை அறிவித்து, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அனைத்திந்திய புரட்சி தலைவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கிய வி.கே சசிகலாவுடன் ராமதாஸ் கூட்டணி அமைத்தார். இருவரும் வேட்பாளர்களை அறிவித்தனர்.

Source link