சென்னை : அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் 17 வேட்பாளர்களின் பெயர்களை, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி நேற்று அறிவித்தார்.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், தே.ஜ., கூட்டணி யில், அ.தி.மு.க.,வுக்கு 167 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில், 150 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை, இரண்டு கட்டங்களாக ஏற்கனவே அ.தி.மு.க., அறிவித்துள்ளது. இந்நிலையில், மீதமுள்ள 17 வேட்பாளர்களுக்கான இறுதிகட்ட பட்டியலை, அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி நேற்று வெளியிட்டார்.
சென்னை கொளத்துாரில், முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து, ஜெயலலிதா பேரவை துணைச்செயலரும், முன்னாள் கவுன்சிலருமான சந்தானகிருஷ்ணன் களமிறக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2021 தேர்தலில், கொளத்துாரில், ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்த, தென் சென்னை வடக்கு கிழக்கு மாவட்டச் செயலர் ஆதிராஜாராம், இந்தத் தேர்தலில், துணை முதல்வர் உதயநிதியை எதிர்த்து, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுகிறார்.
சென்னையில் படுகொலை செய்யப்பட்ட, பகுஜன் சமாஜ் கட்சி தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியும், தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான பொற்கொடி, திரு.வி.நகர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
அதன் விபரம்:
தொகுதி வேட்பாளர்
ஆயிரம் விளக்கு: முன்னாள் அமைச்சர் வளர்மதி
அண்ணாநகர்: முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா
சோப்பாக்கம் –திருவல்லிக்கேணி: ஆதி ராஜாராம்
திட்டக்குடி (தனி): முருகுமாறன்
துறைமுகம் ராயபுரம்; மனோ
விருகம்பாக்கம்: விருகை ரவி
தி.நகர்: சத்யநாராயணன்
வேளச்சேரி: அசோக்
சோழிங்கநல்லுார்: கே.பி.கந்தன்
ஆர்.கே.நகர்: ராஜேஷ்
வில்லிவாக்கம் விஜயகுமார்
திருச்சுழி ராஜவர்மன்
ஆலந்துார் சரவணன்
கொளத்துார் சந்தானகிருஷ்ணன்
திரு.வி.க., நகர் (தனி) பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்
எழும்பூர் (தனி) அபிஷேக் ரங்கசாமி
ஆலங்குடி விமல்
சென்னை: அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் 17 வேட்பாளர்களின் பெயர்களை, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி நேற்று அறிவித்தார்.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், தே.ஜ., கூட்டணியில், அ.தி.மு.க.,வுக்கு 167 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதில், 150 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை, இரண்டு கட்டங்களாக ஏற்கனவே அ.தி.மு.க., அறிவித்துள்ளது.
இந்நிலையில், மீதமுள்ள 17 வேட்பாளர்களுக்கான இறுதிகட்ட பட்டியலை, பழனிசாமி நேற்று வெளியிட்டார்.
சென்னை கொளத்துாரில், முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து, ஜெயலலிதா பேரவை துணைச்செயலரும், முன்னாள் கவுன்சிலருமான சந்தானகிருஷ்ணன் களமிறக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2021 தேர்தலில், கொளத்துாரில் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்த, தென் சென்னை வடக்கு கிழக்கு மாவட்டச் செயலர் ஆதிராஜாராம், இந்தத் தேர்தலில், துணை முதல்வர் உதயநிதியை எதிர்த்து, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுகிறார்.
சென்னையில் படுகொலை செய்யப்பட்ட, பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியும், தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான பொற்கொடி, திரு.வி., நகர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
