சென்னை: அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், பா.ஜ., உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு இன்று இறுதி

சென்னை: அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், பா.ஜ., உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு இன்று இறுதி செய்யப்பட்டது. பாஜ- 27, பாமக 18, அமமுக 11 தொகுதிகளில் போட்டியிட உள்ளன.

தி.மு.க., கூட்டணியில், தொகுதி பங்கீடு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. காங்கிரஸ், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டது. இன்னும் வி.சி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தே.மு.தி.க., கட்சிகளுக்கு தான் தொகுதிகளை ஒதுக்க வேண்டியுள்ளது.

அ.தி.மு.க., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில், பா.ஜ., – பா.ம.க., – அ.ம.மு.க., – த.மா.கா., – புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, புரட்சி பாரதம் போன்ற கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

18.28 சதவீத ஓட்டு

கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக பழனி சாமியுடன், பா.ஜ., மேலிட தலைவர்கள் பேச்சு நடத்திஉள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, பழனிசாமி கடந்த வாரம் டில்லியில் சந்தித்து பேசினார். அப்போது, பா.ஜ., உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள், அ.தி.மு.க., போட்டியிட உள்ள தொகுதிகள் தொடர்பாக பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுவரை ரகசியமாக நடத்தப்பட்ட பேச்சுகளில், ஒவ்வொரு கட்சிக்கும் எவ்வளவு தொகுதிகள் என்பது முடிவு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சை, அ.தி.மு.க., இன்று அதிகாரப்பூர்வமாக துவக்கியது. இதற்காக, மத்திய அமைச்சரும், பா.ஜ., தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல், இன்று சென்னை வந்தார்.

ஒப்பந்தம்

தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரனுடன் சென்று, இன்று மதியம் பழனிசாமியை சந்தித்து பேசினார். தொடர்ந்து, பா.ம.க., தலைவர் அன்புமணி, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் உட்பட கூட்டணி கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்தார்; தொகுதி பங்கீட்டை இறுதி செய்யப்பட்டது.

இதன்படி பாஜவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. மற்ற கட்சிகளுடன் பேச்சு நடந்து நடந்து வருவதாக இபிஎஸ் கூறியுள்ளார்.

Source link