சென்னை: அ.தி.மு.க.,வும் த.வெ.க.,வும் படுதோல்வி அடையும் என மா.கம்யூ., அரசியல் தலைமை குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன்

சென்னை: அ.தி.மு.க.,வும் த.வெ.க.,வும் படுதோல்வி அடையும் என மா.கம்யூ., அரசியல் தலைமை குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

இது குறித்து மா.கம்யூ., அரசியல் தலைமை குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் கூறியதாவது: புதுச்சேரி ‘இண்டி’ கூட்டணியில் ஒற்றுமை இல்லை என, அண்ணாமலை கூறுகிறார். தமிழத்தில் தே.ஜ., கூட்டணியில் முரண்பாடு இல்லையா. இபிஎஸ் பற்றி அண்ணாமலை பேசியதும், அதற்கு இபிஎஸ் அளித்த பதிலடியையும் மக்கள் மறக்கவில்லை.

அ.தி.மு.க., நீக்கிய தினகரனை இப்போது கூட்டணியில் சேர்த்துள்ளனர். இபிஎஸ்யும் தினகரனும் பரஸ்பரம் திட்டித் தீர்த்தனர். கூட்டணி வைத்த பின், அதெல்லாம் சரியாகிவிட்டதா?. அப்பா – மகனுக்கு இடையே தீர்க்க முடியாத பிரச்னை, பா.ம.க., இரண்டாகிவிட்டது. அதில், அன்புமணியை சேர்த்துக் கொண்டால், உங்கள் கூட்டணி பலமாகிவிடுமா?

சின்னாபின்னமான அ.தி.மு.க.,வும், சிதைந்துபோன கட்சிகளும் சேர்ந்தால் வலுவான கூட்டணி என்று எப்படி சொல்ல முடியும்? தமிழக சட்டசபை தேர்தலில் த.வெ.க., – அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் படுதோல்வியை சந்திக்கும்.இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறினார்.

Source link