சென்னை: ஆண்டு செலவு கணக்கை முடிப்பதற்காக, வேளாண் துறையினர் மாமல்லபுரத்திற்கு, மூன்று நாள் பயணமாக இன்ப

சென்னை: ஆண்டு செலவு கணக்கை முடிப்பதற்காக, வேளாண் துறையினர் மாமல்லபுரத்திற்கு, மூன்று நாள் பயணமாக இன்ப சுற்றுலா சென்றுள்ளனர்.

தமிழக அரசு துறைகளுக்கு, ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் நிதி வழங்கப்படுகிறது. நிதித் துறையின் நேரடி கண்காணிப்பில், இந்த நிதியை திட்டங்களுக்கும், பல்வேறு பணிகளுக்கும் பயன்படுத்த வேண்டும்.

வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டாலும், செலவுகள் நிதித்துறை வாயிலாகவே கண்காணிக்கப்படுகிறது.

உத்தரவு துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதியை, அந்த நிதியாண்டில் மார்ச் மாதத்திற்குள் செலவிட்டு முடிக்க வேண்டும். செலவு விபரங்களை, நிதித்துறைக்கு அனுப்ப வேண்டும். செலவிடாத நிதியை, நிதித்துறை திரும்ப பெற்றுக்கொள்ளும்.

அதன்படி, நடப்பு 2025 – 26ம் நிதியாண்டிற்கு, செலவிடப்பட்ட தொகைகள் குறித்த செலவு விபரங்களை, வரும் 23ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என, நிதித்துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, பல துறைகளிலும், பட்ஜெட் செலவு கணக்கை இறுதி செய்யும் பணிகள், தீவிரமாக நடந்து வருகின்றன. வேளாண் துறைக்கு, பல பணிகளுக்கு ஒதுக்கிய நிதி, செலவு செய்யப்படாமல் உள்ளது.

இந்த நிதியை, துறை அலுவலர்கள், ஆய்வு என்ற பெயரில் செலவு செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்காக, மாமல்லபுரத்திற்கு இன்ப சுற்றுலாவாக, தலைமைச் செயலகத்தில் உள்ள வேளாண் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் அழைத்து செல்லப் பட்டுள்ளனர்.

இதற்காக, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித் துறையின் இரண்டு சொகுசு பஸ்களில், மாமல்லபுரத்திற்கு 60க்கும் மேற்பட்ட ஊழியர்கள், நேற்று முன்தினம் மாலை அழைத்து செல்லப்பட்டு உள்ளனர்.

அனுமதி அங்குள்ள சுற்றுலாத் துறை ஹோட்டலில் அறை கள் ஒதுக்கப்பட்டு, அனைவரும் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இன்று அலுவலக நாளாக இருந்தாலும், சுற்றுலா சென்ற அனைவருக்கும், ஆய்வுப்பணி என்ற பெயரில் விடுமுறை வழங்கப்பட்டு உள்ளது.

இதற்கு, துறையின் துணை செயலர் செந்தில்குமார் வாயிலாக சிறப்பு அனுமதி பெறப்பட்டு உள்ளது.

இதேபோல் தங்களையும், இன்ப சுற்றுலா அழைத்து செல்ல வேண்டும் என, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள வேளாண் துறை இயக்குநர் அலுவலக அதிகாரிகளும், அலுவலர்களும், உயர் அதிகாரிகளுக்கு நெருக்கடி தந்துள்ளனர்.

இதையடுத்து அவர்களையும், மற்றொரு குழுவாக, மாமல்லபுரம் அழைத்து செல்ல, ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

Source link