சென்னை: இரு தினங்களில் பாஜ தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை கமலாலயத்தில் தமிழக சட்டசபை தேர்தலில் களம் காணும் பாஜ வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பாஜவின் அமைப்புச் செயலாளர் பி.எல் சந்தோஷ் தலைமை தாங்கினார். தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், சுதாகர் ரெட்டி, கருப்பு முருகானந்தம் ஆகியோர் பங்கேற்றனர்.
பிறகு நிருபர்கள் சந்திப்பில் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: கமிட்டி கூடி வேட்பாளர் பட்டியலை முடிவு செய்வோம். அதன் பிறகு இன்னும் இரு தினங்களில் பாஜ தேர்தல் அறிக்கை அறிவிக்கப்படும். பாஜ வேட்பாளர் குறித்து டில்லியில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
