சென்னை: இலவச பஸ் பயண திட்டம் விரிவடையும். இது, என் ‘ஸ்டேட்மென்ட் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிக்கை: விடியல் பயணம், புதிய எதிர்காலத்தை எழுதிய முதல் கையெழுத்து. திராவிட மாடலில், 7,712 விடியல் பஸ்கள் இயக்கப்படுகின்றன. கடந்த, 2021 – -22ம் ஆண்டு முதல் 2025- – 26ம் ஆண்டில், மார்ச் 1ம் தேதி வரை மேற்கொள்ளப்பட்டுள்ள விடியல் பயணங்களின் மொத்த மதிப்பு, 897.82 கோடி ரூபாய்.
பாதுகாப்பான, சுதந்திரமான பயணங்களால், மகளிர் முன்னேற்றத்தில், புதிய உயரங்களை எட்டியிருப்பதோடு, ஆண்டுக்கு ஆண்டு விடியல் பயணங்கள் தொடர்ந்து உயர்ந்து கொண்டே போவது, இந்த திட்டத்தின் வெற்றியை பறைசாற்றுகிறது.
மகளிர் மட்டுமல்ல, திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோரும், இலவச பஸ் பயண திட்டத்தால் பயன் பெறுகின்றனர். நாம் செயல்படுத்திய இத்திட்டம், எல்லா மாநிலங்களிலும், எதிரொலிக்க துவங்கி விட்டது.
யார் வந்தாலும் மாற்ற முடியாது என்ற நிலையை அடைந்திருக்கிறது. தி.மு.க., ஆட்சி 2.0-வில் இத்திட்டம் இன்னும் மேன்மையடையும். இது, ஸ்டாலின், ‘ஸ்டேட்மென்ட்.’இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
