சென்னை: இளைஞர்கள் போதைப்பழக்கத்துக்கு அடிமை ஆகக்கூடாது என நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் ரஜினி கூறியதாவது: நடிகர்கள் பின்னால் செல்லும் இளைஞர்கள் தான் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவர்களுக்கு ஏதாவது அடிபட்டால் அவர்களுக்கு தானே காயம் ஆகும். இளைஞர்களுக்கு படிப்பதில் மட்டும் தான் முழு கவனம் இருக்க வேண்டும்.
படிக்கிற டைமில் படிக்காமல் இருந்தால் வாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்பட வேண்டி இருக்கும். அதுமட்டும் மனதில் வைத்து கொண்டு இளைஞர்கள் படிப்பில் மட்டும் தீவிர சிந்தனை எல்லாம் இருக்க வேண்டும்.
முதலில் உடம்பை ஆரோக்கியமாக பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த டைமில் இளைஞர்களுக்கு முதலில் சொல்வது, தயவு இளைஞர்கள் குடிப்பழக்கத்திற்கும், கஞ்சா இதில் எல்லாம் நீங்கள் அடிமை ஆகாதீர்கள்.
அதில் அடிமையானால் உங்கள் வாழ்க்கையே கெட்டு போய்விடும். அது நீங்கள் மட்டுமல்ல உங்கள் சம்மந்தப்பட்ட தாய், தந்தை மற்றும் குடும்பம் என எல்லோருடைய வாழ்க்கையையும் நரகமாக்கிவிடும். அதனால் அது போன்ற நண்பர் கிடைத்தால் அவர்கள் கிட்ட கூட போகாதீர்கள். தூர விலகிவிடுங்கள். இவ்வாறு ரஜினி கூறினார்.
