சென்னை: '' எங்களை பொறுத்தவரை இடங்களின்எண்ணிக்கையை விட அரசியல் சித்தாந்தமே முக்கியமானது,'' என மார்க்சிஸ்ட்

சென்னை: ” எங்களை பொறுத்தவரை இடங்களின்எண்ணிக்கையை விட அரசியல் சித்தாந்தமே முக்கியமானது,” என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலர் பெ.சண்முகம் கூறியுள்ளார்.

திமுக கூட்டணியில் ஆறு தொகுதிகளை கேட்ட மார்க்சிஸ்ட் கட்சிக்கு இந்த முறை ஐந்து தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டது. இது கடந்த தேர்தலை விட குறைவாகும். இதனைவைத்து அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் இன்றைய தேர்தல் பிரசாரத்தில் கூட , ‘கம்யூனிஸ்ட் கட்சி எவ்வளவு போராடியும் கடந்த தேர்தலை விட குறைவான தொகுதிகளையே பெற்றுள்ளதாக ‘ பேசினார்.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கூட்டணியில் பல கட்சிகள் இணைந்தள்ளன. இப்போ சுமார் 26 கட்சிகள் உள்ளன. லோக்சபா தேர்தலில் சில சிறிய கட்சிகள் எங்களுக்கு ஆதரவு அளித்தன. ஆனால், அப்போது அவர்களுக்கு இடங்கள் வழங்கப்படவில்லை. இப்போது இடங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். தமிழகம் கண்ட மிகப்பெரிய கூட்டணிகளில் இதுவும் ஒன்று. பாஜ அதிமுக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்பதே எங்களது முக்கிய குறிக்கோள் என்பதால், ஐந்து இடங்களுக்கு சம்மதித்தோம். எங்களை பொறுத்தவரை இடங்களின் எண்ணிக்கையை விட அரசியல் சித்தாந்தமே முக்கியமானது.

கட்சியினர் சித்தாந்தத்தால் வழிநடத்தப்படுபவர்கள். ஒரு முடிவு எடுக்கப்பட்டால், அதை நாங்கள் முழுமையாக ஏற்றுக் கொள்வோம். ஆரம்பத்தில் சிறிய ஏமாற்றங்கள் இருக்கலாம். ஆனால், ஒப்பந்தத்திற்கு பிறகு, கட்சியினர் முழு ஒற்றுமையுடன் பணியாற்றுவார்கள். கூட்டணியின் வெற்றியை உறுதி செய்ய 100 சதவீதம் உழைப்பார்கள்.

2004 ல் எங்களுக்கு 61 எம்பிக்கள் இருந்தனர். ஆனால், அது எங்கள் வளர்ச்சியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. சில ஆண்டுகளில் மிகக்குறைவான எம்எல்ஏக்களே இருந்தனர். அப்போதும் கட்சி சுறுசுறுப்பாகவே இருக்கிறது.

இந்தியாவில் எந்த ஒரு அரசியல் கட்சியு்ம தனது வாக்குறுதிகளை 100 சதவீதம் நிறைவேற்றியதில்லை. இது எங்களுடையது உட்பட அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும். ஆனால், பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றுவது ஒரு பெரிய சாதனை. பல நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடைந்துள்ளன. அது அவர்களுக்கு ஓரளவுக்கு திருப்தியை தந்துள்ளது. மீதமுள்ள வாக்குறுதிகள் வரும் ஆண்டுகளில் நிறைவேற்றப்படலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் சண்முகம் கூறியுள்ளார்.

Source link