சென்னை: எதிர்க்கட்சியாக இருந்தாலும் தேர்தல் அறிக்கை, பிரசாரம் மற்றும் வேட்பாளர் பட்டியல் என 2026 சட்டசபை

சென்னை: எதிர்க்கட்சியாக இருந்தாலும் தேர்தல் அறிக்கை, பிரசாரம் மற்றும் வேட்பாளர் பட்டியல் என 2026 சட்டசபை தேர்தலில் இபிஎஸ் படு ஸ்பீடாக களம் இறங்கி உள்ளார்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் பணிகள் வேகம் எடுத்துள்ளன. ஏப்.23ம் தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்க இருக்கிறது. நாட்கள் வெகு குறைவுதான் என்பதால், தேர்தல் பணிகளை அனைத்து கட்சிகளும் மும்முரப்படுத்தி உள்ளன.

அந்த வகையில், அதிமுக தமது தேர்தல் பணிகளை மற்ற கட்சிகளை காட்டிலும் வேகப்படுத்தி வருகிறது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் இபிஎஸ் ஆரம்பத்திலேயே 3 கட்டங்களாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். நேற்றைய தினம், கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டை அறிவித்தார்.

அன்றைய தினம் மாலையே முழுமையான தேர்தல் அறிக்கையான இலவச பிரிட்ஜ், ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம் உதவித்தொகை, மகளிருக்கு மாதம் ரூ.2000, கல்விக்கடன் தள்ளுபடி என கிட்டத்தட்ட 297 அறிவிப்புகளை வெளியிட்டார். அதே வேகத்தில் இன்று கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை வெளியிட்டார். அதிமுகவின் 23 தொகுதிகளின் வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்தார்.

தேர்தல் அறிக்கை, வேட்பாளர்கள் பட்டியல், கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகள், இதற்கு இடையே தமது தேர்தல் பிரசார திட்டம் என படு ஸ்பீடாய் சென்று கொண்டிருக்கும் இபிஎஸ், இன்றைய தினம் மயிலாப்பூரில் தேர்தலுக்கான தமது முதல் பிரசாரத்தையும் தொடங்கி விட்டார். பாஜ முக்கிய தலைவரான தமிழிசை சவுந்தர்ராஜனுடன் இணைந்து அவர், ஓட்டுகளை சேகரித்தார்.

ஆளும் கட்சியான திமுக இன்னமும் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகளை அடையாளம் காணாமல் உள்ளது. தொகுதி பங்கீடுகளை முடித்து விட்டாலும், தொகுதிகள் ஒதுக்குவது, வேட்பாளர்களை தேர்வு செய்வது, பிரசாரத்திட்டம் வெளியீடு என திமுகவும், அதன் கூட்டணியும் பின்தங்கியே உள்ளது.

Source link