சென்னை: எத்தனை முனை போட்டி வந்தாலும் எங்கள் கூட்டணி தான் வெற்றி பெறும் என்று முதல்வரும், திமுக தலைவருமான

சென்னை: எத்தனை முனை போட்டி வந்தாலும் எங்கள் கூட்டணி தான் வெற்றி பெறும் என்று முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சட்டசபை தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட கையோடு, மெரினாவில் உள்ள அண்ணாதுரை, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; அண்ணாதுரை, கருணாநிதி நினைவிடங்களில் வாழ்த்து பெறுவதற்காக வந்தோம். எங்கள் கடமையை செய்து முடித்துள்ளோம். நாங்கள் அறிவித்திருக்கும் வேட்பாளர்கள் மட்டுமல்ல, எங்களின் கூட்டணி வேட்பாளர்களும் மாபெரும் வெற்றி பெறும் வகையில் எங்களது பணிகள் அமையும். இதற்காக அண்ணாதுரை, கருணாநிதி நினைவிடங்களில் உறுதியெடுத்துக் கொண்டோம்.

தமிழகம் Vs டில்லி என்பதில் எந்த சந்தேகம் இல்லை. எத்தனை முனை போட்டி வந்தாலும் எங்கள் கூட்டணி தான் வெற்றி பெறும். நாளை மாலை தமிழக மக்களுக்கான (தேர்தல் அறிக்கை) செய்தியை வெளியிடுவோம், இவ்வாறு அவர் கூறினார்.

Source link