சென்னை: கடந்த 5 ஆண்டுகளில் 1.55 லட்சம் அரசுப் பணி நியமனங்களைச் செய்துள்ளோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து

சென்னை: கடந்த 5 ஆண்டுகளில் 1.55 லட்சம் அரசுப் பணி நியமனங்களைச் செய்துள்ளோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: I am a product of நான் முதல்வன் – சுப்பிரமணிய பாரதி. கடந்த 5 ஆண்டுகளில் 1.55 லட்சம் அரசுப் பணி நியமனங்களைச் செய்துள்ளோம். ஒட்டுமொத்தமாக 52,81,495 வேலைவாய்ப்புகளை உருவாக்கி உள்ளோம்.

நான் முதல்வன் திட்டத்தில் உதவிபெற்று 145 மாணவர்கள் யுபிஎஸ்சி குடிமைப்பணித் தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளனர். அதற்குச் சிறந்த சான்றுதான், 22 வயதில் தனது முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று இந்திய அளவில் young sensation ஆகியுள்ள நம் சுப்பிரமணிய பாரதி.

இதுதான் நான் காண விரும்பும் தமிழகம். வளமான இளைய தமிழகம். நமது திராவிட மாடல் அரசு கல்வியில் செய்து வரும் முதலீடுகளின் முழுவீச்சு அடுத்த 5 ஆண்டுகளில் சமூகத்தின் நல்மாற்றத்தில் எதிரொலிக்கும். வெற்றிக் கதைகள் மேலும் உயரும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Source link