சென்னை: கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஆஜராவதற்காக தவெக தலைவர் விஜய் டில்லி புறப்பட்டு சென்றார்.
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், இதுவரையில் சுமார் 200க்கும் மேற்பட்ட சாட்சியங்களை விசாரித்துள்ளது. விஜய் பயன்படுத்திய பிரசார வாகனத்தையும் ஆய்வு செய்தது. இந்த சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜயிடம் இரு முறை சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது. அதேபோல, தவெக நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, விஜயிடம் 3வது முறையாக விசாரணை நடத்த சிபிஐ சம்மன் அனுப்பியது. சென்னையில் ஆஜராக விஜய் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அதனை சிபிஐ நிராகரித்தது.
இந்த நிலையில், அவர் இன்று பிற்பகல் சென்னையில் இருந்து விமானம் மூலம் டில்லி புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு இரவு நட்சத்திர ஓட்டலில் தங்கும் அவர், நாளை சிபிஐ அதிகாரிகள் முன்பு ஆஜராக இருக்கிறார்.
வரும் சட்டசபை தேர்தலில் விஜயின் தவெக, என்டிஏவுடன் கூட்டணி வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவரது இந்த டில்லி பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
