சென்னை; கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் செயல்படுத்தும் கிருஹலக்ஷ்மி திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவி

சென்னை; கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் செயல்படுத்தும் கிருஹலக்ஷ்மி திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவி பெண்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்பட்டு வருகிறது. பெண்களை அதிகாரமளிப்பது இந்தியாவை அதிகாரமளிப்பதாகும் என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் சட்டசபை தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்படலாம். இப்படியான சூழலில், மகளிர் உரிமை தொகை பெறும் பெண்களின் வங்கி கணக்குகளில் ரு.5000 வரவு வைக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும், வரவேற்பையும் பெற்று இருக்கிறது.

இதுகுறித்து பல்வேறு கட்சிகளின் அரசியல் தலைவர்கள் கருத்துகளை முன் வைத்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் செயல்படுத்தும் கிருஹ லக்ஷ்மி திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவி பெண்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்பட்டு வருவதையும் சுட்டிக்காட்டி உள்ளார்.

அவர் தமது பதிவில் கூறியுள்ளதாவது;

பெண்கள் அதிகாரமடைதல் ஒரு கோஷமல்ல. அது ஒரு பொறுப்பு.

தமிழகத்தில் அரசு செயல்படுத்தும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவி பெண்களுக்கு நிதி உதவி வழங்கப்படுவது ஒரு முக்கியமான முன்னேற்றமாகும்.

இன்று மூன்று மாதத் தொகையை முன்கூட்டியே வழங்கி, கூடுதல் ரூபாய் 2000 உதவி வழங்கியிருப்பது அந்த குடும்பங்களின் பொருளாதாரத்தில் பெண்கள் வகிக்கும் முக்கிய பங்கினை உணர்த்துகிறது.

அதேபோல், கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் செயல்படுத்தும் கிருஹ லக்ஷ்மி திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவி பெண்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்பட்டு, அவர்களின் பொருளாதார சுயநிலையை வலுப்படுத்துகிறது.

இரு மாநிலங்களும் பெண்களை முன்னுரிமையாகக் கொண்டு குடும்பங்களுக்கு , பொருளாதாரம் வலுப்படும் என்பதை நிரூபித்துள்ளன. 2019யில் ராகுல் முன்வைத்த “ந்யாய்” (Nyay மாதம் ரூ 6000)என்ற கருத்து, பெண்களுக்கு நேரடி வருமான ஆதரவு வழங்கும் பார்வை, இந்தியா செல்ல வேண்டிய திசையை காட்டுகிறது: மரியாதை, பாதுகாப்பு, பொருளாதார நீதி.

பெண்களை அதிகாரமளிப்பது இந்தியாவை அதிகாரமளிப்பதாகும். இந்த முயற்சிகள் தொடர்ந்து வலுப்பெறட்டும்.

இவ்வாறு மாணிக்கம் தாகூர் தமது பதிவில் கூறியுள்ளார்.

Source link