சென்னை காசிமேட்டில் அமோனியா வாயு கசிவு: நுலிழையில் உயிர் தப்பிய மீனவர்கள் – நள்ளிரவில் நடந்த சம்பவம் – chennai ammonia gas leak at a private ice factory in kasimedu harbour

சென்னை காசிமேட்டில் அருகே உள்ள பவர் குப்பம் பகுதியில் சந்திரசேகரன் என்பவருக்கு சொந்தமான ஐஸ் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தனியார் தொழிற்சாலையில் சுமார் 150 லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்க் வைத்து அமோனியா திரவ வாயு சேமிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளனர்.

காசிமேடு ஐஸ் தொழிற்சாலை

இந்த நிலையில் கம்ப்ரஸர் மோட்டார் பழுதடைந்துள்ளது. இதனை சரி செய்யும் பொழுது, பயன்படுத்தப்பட்ட திரவ நிலையில் உள்ள சுமார் ஆறு கிலோ அமோனியா வாயுவை வாலியில் பிடித்து வைத்துள்ளனர். இந்த நிலையில் புதியதாக அந்த தொழிற்சாலைகள் பணிக்கு சேர்ந்துள்ள ஒரு நபர் அது என்ன என்று தெரியாமல் அருகில் இருந்த கழிவு நீர் கால்வாயில் ஊற்றியுள்ளார்.

Work ஆகுமா பொது வேட்பாளர் Concept? திமுக போடும் கணக்கு Discussed!

இதனால் அமோனியா வாயு கசிவானது காற்றில் பரவி அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. இதனால் அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய பொதுமக்கள் மூச்சு விடாமல் முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். மேலும் அமோனியா வாயு கசிவு கால்வாயில் ஊற்றிய சம்பவத்தை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த சிலர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

காற்றில் கலந்த அமோனியா வாயு கசிவு

தகவல் அறிந்து உடனடியாக விரைந்து வந்த ராயபுரம் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு கால்வாயில் கலந்திருக்கும் அமோனியா வாயுவை தண்ணீரில் பீய்ஸி அடித்து அமோனியா வாயுவின் வீரியத்தை தனித்தனர். குறிப்பாக சம்பவத்தன்று இந்த பகுதியில் விடுமுறை தினம் என்பதால் இரவு நேரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாததால் பெரும் விபத்தானது தவிர்க்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து , இந்த சம்பவம் குறித்து ஐஸ் தயாரிக்கும் தொழிற்சாலை பாதுக்காப்பு நிலை குறித்து அதன் உரிமையாளர் சந்திர சேகரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். மேலும் அங்கு பாதுகாப்பு நடவடிக்கையாக தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டன. மேலும், எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் மீனவர்கள் அந்த பகுதிக்குள் செல்ல முடியாதபடி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராயபுரம் தீயணைப்பு மீட்புப் பணி

முன்னதாக திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள கன்னிகைபேர் பகுதியில் செயல்பட்டு வந்த தனியாருக்குச் சொந்தமான இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் கடந்த ஜூன் 21-ஆம் தேதி திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. பணியில் இருந்த தொழிலாளர்கள் விஷவாயுவை சுவாசித்ததால் பலர் மயங்கி விழுந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர், காவல்துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

திருவள்ளூரில் அமோனியா கசிவால் 18 பேர் உயிரிழப்பு

பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் உடனடியாக அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி 18 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த விபத்து தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொழிற்சாலைகளில் பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்ற கேள்வியும் எழுந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி, அமோனியா வாயு கசிவுக்கான காரணம் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். தொழிற்சாலைகளில் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பல்வேறு தரப்பினரிடமிருந்து வலியுறுத்தப்பட்டது.

Source link