சென்னை: 'குந்தவை' திரிஷாவை கொஞ்ச நேரம் வீட்டுக்குள்ளே குந்த வையுங்கள் என்று நடிகர் பார்த்திபன் தெரிவித்த

சென்னை: ‘குந்தவை’ திரிஷாவை கொஞ்ச நேரம் வீட்டுக்குள்ளே குந்த வையுங்கள் என்று நடிகர் பார்த்திபன் தெரிவித்த கமெண்டுக்கு திரிஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நடிகை ஒருவருடன் தொடர்பில் இருக்கிறார், தம்மை வீட்டில் சேர்க்க மறுக்கிறார் என்று கூறி தவெக தலைவரும், நடிகருமான விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த நடிகை யார் என்று சங்கீதா குறிப்பிடாத நிலையில், நடிகை திரிஷாவுடன் நிகழ்ச்சி ஒன்றில் விஜய் ஜோடியாக கலந்து கொண்டது பேசு பொருளானது.

இப்படியான ஒரு சூழலில், சினிமா நிகழ்ச்சி ஒன்றில் திரிஷாவின் பிரமாண்ட போட்டோவை முன்னிலைப்படுத்தி, இயக்குநரும், நடிகருமான பார்த்திபனிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பார்த்திபன், குந்தவையை கொஞ்ச நாள் குந்த வைப்பது ந்லலது, வீட்டுக்குள்ளே குந்த வைப்பது கொஞ்சம் நல்லது என்று தெரிவித்து இருந்தார்.

பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் திரிஷா நடித்திருந்தார். அதே படத்தில் பார்த்திபனும் நடித்திருந்ததால் அவரின் இந்த கமெண்ட் சமூக வலைதளங்களில் பேசு பொருளானது. இந் நிலையில் பார்த்திபனின் கமெண்ட பெருமளவில் வைரலாக, அதற்கு நடிகை திரிஷா கண்டனம் தெரிவித்து பதிலடியும் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளதாவது;

அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கடைசி நேரத்தில் அவசரமாக என் போட்டோவும் பெயரும் பயன்படுத்தப்படுவதாக தனி நபர் ஒருவரின் உதவியாளர் மூலம் எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஒரு நுட்பமான மைக்ரோபோன் நகைச்சுவையாகவும், அறிவுப்பூர்வமாகவும் எந்த கருத்தையும் பேசாது. நாம் யாரை குறிப்பிட்டு அறிவில்லாத குரூரமான வார்த்தைகளை பேசுகிறோமோ அந்த வார்த்தைகள் அதை பேசுபவரை பற்றி நிறைய பேசும்.

இவ்வாறு நடிகை திரிஷா தெரிவித்துள்ளார்.

திரிஷாவின் பதிவு வெளியான அதே வேளையில், தமது செயலுக்கு பார்த்திபனும் வருத்தம் தெரிவித்து எக்ஸ் வலை தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் எது நடந்ததோ அது தவறாகவே நடந்துள்ளது. இதில், வருந்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறி உள்ளார்.

Source link