சென்னை: கூடுவாஞ்சேரி அருகே கொசுவர்த்தியால் ஏற்பட்ட தீ விபத்தில் கணவன், மனைவி மற்றும் இரண்டரை வயது மகள் ஆகிய 3

சென்னை: கூடுவாஞ்சேரி அருகே கொசுவர்த்தியால் ஏற்பட்ட தீ விபத்தில் கணவன், மனைவி மற்றும் இரண்டரை வயது மகள் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.

சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி அருகே கன்னிவாக்கம் பகுதியை சேர்ந்த பார்த்திபன்,33, ஜெயசித்ரா 29, தம்பதியினருக்கு இரண்டரை வயது ஜெயஸ்ரீ என்ற குழந்தை உள்ளது. நேற்றிரவு இவர்கள் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் கணவன், மனைவி மற்றும் இரண்டரை வயது மகள் ஆகிய 3 பேரும் தீயில் கருகி உயிரிழந்தனர்.

விசாரணையில், இந்த தம்பதி படுக்கும் மெத்தை அருகே, கொசுவத்தி ஏற்றி வைத்துள்ளனர். அதில் இருந்து தீ மெத்தையில் பரவியுள்ளது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Source link