சென்னை-கோவா 'டிரா': ஐ.எஸ்.எல்., கால்பந்தில்

சென்னை: சென்னை, கோவா அணிகள் மோதிய ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டி 1-1 என ‘டிரா’ ஆனது.

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 12வது சீசன் நடக்கிறது. சென்னையில் நடந்த லீக் போட்டியில் சென்னை, கோவா அணிகள் மோதின. முதல் பாதி கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட சென்னை அணிக்கு 48வது நிமிடத்தில் இர்பான் யத்வாட் ஒரு கோல் அடித்தார். இதற்கு, 88வது நிமிடத்தில் கோவா அணியின் சந்தேஷ் ஜிங்கன் ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். தொடர்ந்து போராடிய இரு அணியினரால் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை.

ஆட்டநேர முடிவில் போட்டி 1-1 என ‘டிரா’ ஆனது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதுவரை விளையாடிய 5 போட்டியில், ஒரு வெற்றி, 2 ‘டிரா’, 2 தோல்வி என, 5 புள்ளிகளுடன் சென்னை அணி 11வது இடத்தில் உள்ளது. கோவா அணி 2 வெற்றி, 4 ‘டிரா’ என, 10 புள்ளிகளுடன் 4வது இடத்தில் நீடிக்கிறது.

கொல்கட்டாவில் நடந்த மற்றொரு லீக் போட்டியில் இன்டர் காஷி, பெங்களூரு அணிகள் மோதின. இதில் பெங்களூரு அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

Source link