சென்னை: சட்டசபை தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் பிப்.20ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று

சென்னை: சட்டசபை தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் பிப்.20ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;

நடைபெற இருக்கும் தமிழகம்-புதுச்சேரி சட்டசபை பொதுத்தேர்தலுக்கான கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் பிப்.20ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் மார்ச் 2ம் தேதி திங்கட்கிழமை வரை கட்சியின் தலைமை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

பொதுத் தொகுதியில் போட்டியிட விரும்புவோர் ரூ.25,000, மகளிர் மற்றும் தனித் தொகுதியில் போட்டியிட விரும்புவோர் ரூ.15,000 விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும்.

வேட்பாளராக போட்டியிட விண்ணப்பித்தவர்கள் கூட்டணியின் தோழமைக் கட்சிகளுக்கென பகிர்ந்து கொள்ளப்பட்ட தொகுதியில் போட்டியிட விண்ணப்பித்திருப்பின் அவர்களது விண்ணப்ப கட்டணம் பின்னர் திருப்பித் தரப்படும்.

விண்ணப்ப படிவம் கட்சி தலைமை அலுவலகத்தில் ரூ.1000 வீதம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அறிக்கையில் துரைமுருகன் கூறியுள்ளார்.

Source link