சென்னை: சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமாகா சார்பில் போட்டியிட உள்ள 5 தொகுதிகளின் வேட்பாளர்கள்

சென்னை: சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமாகா சார்பில் போட்டியிட உள்ள 5 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டார்.

அ.தி.மு.க., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில், பா.ஜ., – பா.ம.க., அ.ம.மு.க., – த.மா.கா., புரட்சி பாரதம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய ஜனநாயக கட்சி உள்ளன. இதில், பா.ஜ.,வுக்கு 27, பா.ம.க.,வுக்கு 18, அ.ம.மு.க.,வுக்கு 11, தமாகாவிற்கு 5 , இந்திய ஜனநாயக கட்சிக்கு 2, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் புரட்சி பாரதம் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் போக, மீதமுள்ள 169 தொகுதிகளில், அ.தி.மு.க., போட்டியிடுகிறது. தற்போது அதிமுக கூட்டணி கட்சிகள் தங்கள் போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளர் பட்டியலை வெளிடும் பணியில் இறங்கி உள்ளது. அந்த வகையில் தமாகா வேட்பாளர் பட்டியலை அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டார். அதன் விபரம் பின்வருமாறு:

* ஒட்டன்சத்திரம்- விடியல் சேகர்

* ஈரோடு மேற்கு- யுவராஜா

* ராணிப்பேட்டை- கார்த்திகேயன்

* கிள்ளியூர்- சைமன்

* கும்பகோணம்- அசோக் குமார்

இவர்களில் விடியல் சேகர், ஏற்கனவே காங்கேயம் தொகுதியில் எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link