சென்னை: சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியிட்டது.சட்டசபை தேர்தலில்

சென்னை: சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியிட்டது.

சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிகவுக்கு கடந்த தேர்தலை விட இரு தொகுதிகள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன. மொத்தம் 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது. திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் அடுத்தடுத்து வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தில் மும்முரம் காட்டி வருகின்றன.

இந்த நிலையில், விசிக போட்டியிடும் 8 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ளார். சிதம்பரம் லோக்சபா எம்பியாக இருந்து வரும் அவர், கட்டுமன்னார்கோவில் தொகுதியில் களமிறங்குகிறார். அந்தத் தொகுதியில் பாமக வேட்பாளரை எதிர்த்து போட்டியிடுகிறார்.

வேட்பாளர்கள் விபரம்

காட்டுமன்னார்கோவில் – திருமாவளவன்

திண்டிவனம் – வன்னி அரசு

செய்யூர் – சிந்தனைச் செல்வன்

பெரியகுளம் – சக்திவேல்

கள்ளக்குறிச்சி – மாலதி

திருப்போரூர் – பன்னீர்தாஸ்

அரக்கோணம் – எழில் கரோலின்

பண்ருட்டி – அப்துல் ரகுமான்

தற்போதை விசிக எம்எல்ஏக்கள் எஸ்.எஸ்.பாலாஜி, பாபு மற்றும் ஆளூர் ஷா நவாஸ்க்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

Source link