சென்னை: சட்டசபை தேர்தலை முன்னிட்டு அதிமுகவின் 2ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை இன்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் அறிவித்தார்.
வாக்குறுதிகள் விபரம் பின்வருமாறு:
* முதியோருக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
விதவை பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 3ம் பாலினத்தவருக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.1200ல் இருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழக்கப்படும்.
* மாணவர்கள் வங்கியில் பெற்ற கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.
* குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.
* ஜல்லிக்கட்டி போட்டியின் போது வீரர்கள் உயிரிழந்தால் குடும்பத்தாருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும். படுகாயம் அடைந்த வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கு ரூ.2 ஆயிரமும், போட்டி நடத்த அரசின் சார்பில் மானியம் ரூ.5 லட்சம் வழங்கப்படும். தற்போதுள்ள ஆன்லைனில் பதிவு செய்யும் முறை ரத்து செய்யப்பட்டு, பழைய நடைமுறை பின்பற்றப்படும்.
* மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும். இவ்வாறு இபிஎஸ் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே முதல்கட்டமாக 5 வாக்குறுதிகளை இபிஎஸ் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
