சென்னை: சாலையில் கிடந்த மொபைல் போனை கண்டெடுத்து, அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்த துாய்மை பணியாளருக்கு பாராட்டு

சென்னை: சாலையில் கிடந்த மொபைல் போனை கண்டெடுத்து, அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்த துாய்மை பணியாளருக்கு பாராட்டு குவிகிறது.

திருவெற்றியூரை சேர்ந்தவர் பாரதி, 46; துாய்மை பணியாளர். இவர், அடையாறு மண்டலத்தில் துாய்மை பணி செய்து வருகிறார். இவர், இன்று அதிகாலை, வேளச்சேரியில் குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, சாலையில் 30,000 ரூபாய் மதிப்புள்ள மொபைல் போனை கண்டெடுத்தார்.

பின் வார்டு அதிகாரிகளிடம் அந்த போனை ஒப்படைத்துவிட்டு தன் பணியை தொடர்ந்துள்ளார்.அதே நேரத்தில், மொபைல் போனை தொலைத்த நபர், தொடர்பு கொண்டு நடந்தவற்றை கூறியுள்ளார். பின் அவரை வேளச்சேரி அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரித்த போது, சூளைமேட்டை சேர்ந்த ஜானகிராமன், 23, என்பது தெரியவந்தது. மொபைல் போனின் அடையாளங்களை கேட்டு அவருடையது தான் என உறுதி செய்தனர். இதையடுத்து, மொபைல் போன் ஜானகிராமனிடம் ஒப்படைக்கப்பட்டது.

Source link