சென்னை: சிட்டிங் மேயராக இருக்கும் 4 பேர் தமிழக சட்டசபை தேர்தலில் திமுகவின் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

சென்னை: சிட்டிங் மேயராக இருக்கும் 4 பேர் தமிழக சட்டசபை தேர்தலில் திமுகவின் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். அவர்களின் பெயர்களை திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

அவர்களின் பெயர் விவரம் வருமாறு;

கன்னியாகுமரி தொகுதியில் ரெ. மகேஷ் போட்டியிடுகிறார். இன்றைய திமுக வேட்பாளர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இடம்பிடித்தது இவரது பெயர் தான். தற்போது நாகர்கோவில் மாநகராட்சி மேயராக இருக்கிறார்.

ஓசூர் மாநகராட்சி மேயராக இருக்கும் சத்யா, ஓசூர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். திருப்பூர் மேயராக இருக்கும் தினேஷ்குமார், திருப்பூர் தெற்கு தொகுதி வேட்பாளராக களம் இறங்குகிறார்.

தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், தஞ்சை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

Source link