சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் சற்றே மாற்றம் காணப்பட்டது. சவரனுக்கு ரூ.240 அதிகரித்து

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் சற்றே மாற்றம் காணப்பட்டது. சவரனுக்கு ரூ.240 அதிகரித்து விற்பனையானது.

சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் நெருக்கடிகளின் எதிரொலியாக ஆபரணத் தங்கத்தின் விலை நிலையில்லாமல் இருந்து வருகிறது. விலை உயர்வில் மாற்றங்கள் இருந்து கொண்டே வந்தாலும், அதில் முதலீடுகள் செய்வோரின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது.

இந் நிலையில் நேற்றைய தினம் போலவே, இன்றும் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து காணப்பட்டது. அதன்படி, சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 120 ஆக விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ஒரு கிராம் ரூ.14,890 ஆக இருக்கிறது.

வெள்ளி விலையிலும் இன்று சற்று மாற்றம் காணப்படுகிறது. ஒரு கிராம் ரூ.10 குறைந்து ரூ.290க்கும், கிலோ ரூ.2 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் வெள்ளி விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்;

19.02.2026 – ஒரு சவரன் ரூ.1,16,000

20.02.2026 – ஒரு சவரன் ரூ. 1,15,360

21.02.2026 – ஒரு சவரன் ரூ. 1,17,440

22.02.2026 – விடுமுறை என்பதால் விலை உயர்வில் மாற்றம் இல்லை

23.02.2026 – ஒரு சவரன் ரூ. 1,18,880

24.02.2026 – ஒரு சவரன் ரூ. 1,19,120

Source link