சென்னை: சென்னையில் இன்று (மார்ச் 26) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு

சென்னை: சென்னையில் இன்று (மார்ச் 26) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 70 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 13 ஆயிரத்து 670 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 13,250 ரூபாய்க்கும், சவரன் 1,06,000 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 250 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்று (மார்ச் 25), தங்கம் விலை கிராமுக்கு 350 ரூபாய் உயர்ந்து, 13,600 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 2,800 ரூபாய் அதிகரித்து, 1,08,800 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து, 260 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு 10,000 ரூபாய் அதிகரித்து, ஒரு கிலோ 2.60 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இந்நிலையில் இன்று (மார்ச் 26) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 70 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 13 ஆயிரத்து 670 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் 260 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Source link