சென்னை: சென்னையில் இன்று (மார்ச் 31) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில தினங்களாக தங்கம், வெள்ளி விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை (மார்ச் 28) ஆபரண தங்கம், கிராம் 13,660 ரூபாய்க்கும், சவரன், 1,09,280 ரூபாய்க்கும் விற்பனையானது.
வெள்ளி கிராம், 250 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கடந்த ஞாயிற்றுக் கிழமை, ஆபரண தங்க சந்தைக்கு விடுமுறை. அன்று, முந்தைய நாள் விலையிலேயே, ஆபரணங்கள் விற்பனையாகின.
நேற்றைய நிலவரம்
நேற்று (மார்ச் 30) காலை, தங்கம் விலை கிராமுக்கு, 60 ரூபாய் குறைந்து, 13,600 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 480 ரூபாய் சரிவடைந்து, 1,08,800 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
நேற்று மாலை தங்கம் கிராமுக்கு, 170 ரூபாய் உயர்ந்து, 13,770 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,360 ரூபாய் அதிகரித்து, 1,10,160 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று தங்கம், சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்தது. வெள்ளி கிராமுக்கு ஐந்து ரூபாய் உயர்ந்து, 255 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 5,000 ரூபாய் அதிகரித்து, 2.55 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இன்றைய நிலவரம்
இந்நிலையில் இன்று (மார்ச் 31) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து 13,670 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
வெள்ளியும் சரிவு
வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 250 ரூபாய்க்கும், கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் சரிந்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
