சென்னை: சென்னையில் இன்று (ஏப்ரல் 02) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 11

சென்னை: சென்னையில் இன்று (ஏப்ரல் 02) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து 13 ஆயிரத்து 950 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலையில், ஏற்ற, இறக்க நிலை காணப்படுகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (மார்ச் 31) ஆபரண தங்கம் கிராம், 13,670 ரூபாய்க்கும், சவரன், 1,09,360 ரூபாய்க்கும் விற்பனையானது.

நேற்றைய நிலவரம்

நேற்று (ஏப்ரல் 01), தங்கம் விலை கிராமுக்கு, 380 ரூபாய் உயர்ந்து, 14,050 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 3,040 ரூபாய் அதிகரித்து, 1,12,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

வெள்ளி கிராமுக்கு, 15 ரூபாய் உயர்ந்து, 265 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 15,000 ரூபாய் அதிகரித்து, 2.65 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இன்றைய நிலவரம்

இந்நிலையில் இன்று (ஏப்ரல் 02) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து 13 ஆயிரத்து 950 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

வெள்ளியும் சரிவு

வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 255 ரூபாய்க்கும், கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் குறைந்து 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Source link