சென்னை: சென்னையில் இன்று (ஏப்ரல் 04) 22 காரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்து, ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 600

சென்னை: சென்னையில் இன்று (ஏப்ரல் 04) 22 காரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்து, ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 100 ரூபாய் உயர்ந்து, 13,950 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலை சில தினங்களாக உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 02) ஆபரண தங்கம் கிராம், 13,750 ரூபாய்க்கும், சவரன், 1,10,000 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 255 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்றைய நிலவரம்

நேற்று (ஏப்ரல் 03), தங்கம் விலை கிராமுக்கு, 100 ரூபாய் உயர்ந்து, 13,850 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 800 ரூபாய் அதிகரித்து, 1,10,800 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.

இன்றைய நிலவரம்

இந்நிலையில் இன்று (ஏப்ரல் 04) 22 காரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்து, ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 100 ரூபாய் உயர்ந்து, 13,950 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில தினங்களாக தங்கம் விலை மீண்டும் உயர்ந்து வருவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Source link