சென்னை: சென்னையில் இன்று (ஏப்ரல் 08) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2720 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலை ஏற்ற, இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 06) ஆபரண தங்கம் கிராம், 13,990 ரூபாய்க்கும், சவரன், 1,11,920 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 260 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்றைய நிலவரம்
நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 130 ரூபாய் குறைந்து, 13,860 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,040 ரூபாய் சரிவடைந்து, 1,10,880 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு ஐந்து ரூபாய் குறைந்து, 255 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 5,000 ரூபாய் சரிவடைந்து, 2.55 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இன்றைய நிலவரம்
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 08) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2720 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 340 ரூபாய் அதிகரித்து 14 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து 265 ரூபாய்க்கும், கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் அதிகரித்து 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்
https://www.dinamalar.com/news/business-commodity
