சென்னை: சென்னையில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் குழந்தைகள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அடுத்த நாவலூர் சாமுண்டீஸ்வரர் நகர் 2வது தெருவில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் விரைந்தனர். இந்த விபத்தில் 1 வயது ஆண் குழந்தை, 4 வயது பெண் குழந்தை ஆகியோர் உயிரிழந்தனர்.
மேலும் 7 வயது சிறுவன், தாய், தந்தை உட்பட 7 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்து 3 வீடுகள் சேதம் அடைந்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
