சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அருண் மாற்றப்படடு, புதிய போலீஸ் கமிஷனராக அபின் தினேஷ் மோதக் நியமனம்

சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அருண் மாற்றப்படடு, புதிய போலீஸ் கமிஷனராக அபின் தினேஷ் மோதக் நியமனம் செய்யப்பட்டார்.

தமிழக சட்டசபைக்கு வரும் 23ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் நேரத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. தலைமைச் செயலர் முருகானந்தம் மாற்றப்பட்டு சாய்குமார் புதிய தலைமைச்செயலராக நியமிக்கப்பட்டார். டிஜிபி ஆக இருந்த வெங்கட்ராமனுக்கு பதில், சந்தீப் ராய் ரத்தோர் புதிய டிஜிபி ஆக பதவியேற்றுள்ளார். மேலும் பல மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் கமிஷனர்கள், எஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டு இருந்தனர்.

இந்நிலையில், சென்னை போலீஸ் கமிஷனராக இருக்கும் அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அவருக்கு பதில் புதிய போலீஸ் கமிஷனராக அபின் தினேஷ் மோதக் நியமிக்கப்பட்டுள்ளார்.

Source link