சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை:
நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், திருவண்ணாமலை மாவட்டம் போளூரில், 4 செ.மீ., மழை பெய்துள்ளது. சத்தீஸ்கர் முதல் மன்னார் வளைகுடா வரை, தெலுங்கானா, தமிழக உள் மாவட்டங்கள் வழியாக, வளி மண்டலத்தில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் இன்று இடி, மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில், நாளை, நாளை மறுநாள், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், சில இடங்களில் இன்று முதல் ஏப்., 12 வரை அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாக வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
