சென்னை: ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் கசிந்த விவகாரத்தில் 6 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது

சென்னை: ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் கசிந்த விவகாரத்தில் 6 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

தவெக தலைவர் விஜய் நடித்த ஜனநாயகன் படம், பொங்கல் அன்று வெளியாவதாக இருந்தது. ஆனால், பல்வேறு பிரச்னைகள் காரணமாக படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், இந்தப்படம் சட்டவிரோதமாக இணையதளங்கள் மற்றும் டெலிகிராம் செயலியில் வெளியானது. இதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள், ர ஜினி, கமல், சீரஞ்சிவி உள்ளிட்ட நடிகர்கள் கண்டனம் தெரிவித்தனர். படம் வெளியிடப்பட்ட இணையதளங்களை முடக்கும் பணியில் சைபர் கிரைம் போலீசார் தீவிரம் காட்டினர்.

இதனிடையே, ஜனநாயகன் படம், சட்டவிரோதமாக வெளியிட்டது தொடர்பாக 6 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.

Source link