சென்னை: டபுள் எஞ்சின் என்று நீங்கள் பீற்றும் டப்பா எஞ்சின் மாநிலங்களையும் தாண்டி, திராவிட மாடல் ஆளும் தமிழகம்

சென்னை: டபுள் எஞ்சின் என்று நீங்கள் பீற்றும் டப்பா எஞ்சின் மாநிலங்களையும் தாண்டி, திராவிட மாடல் ஆளும் தமிழகம் தான் டபுள் டிஜிட் பொருளாதார வளர்ச்சியைச் சாதித்துள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: பாஜ எம்எல்ஏவைத் தேர்ந்தெடுத்தால் தான் மதுரைக்கு மெட்ரோ தருவோம் என்று பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும்தான் மஹாராஷ்டிர முதல்வரின் வேலையா? அரசியலமைப்பின் மீது உறுதிமொழி ஏற்ற ஒரு முதல்வர், எதிர்க்கட்சி ஆளும் மாநிலத்தில் வந்து இப்படி பேசுவதற்கு வெட்கப்பட வேண்டும்.

நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசின் புறக்கணிப்பை மீறி, தமிழக அரசு நிறைவேற்றி வரும் சாதனைத் திட்டங்கள் எத்தனை என்று அவருக்குத் தெரியுமா? தெரியாவிட்டால் கேட்டுத் தெரிந்துகொண்டு பேச வேண்டும்.

டபுள் எஞ்சின் என்று நீங்கள் பீற்றும் டப்பா எஞ்சின் மாநிலங்களையும் தாண்டி, திராவிட மாடல் ஆளும் தமிழகம் தான் டபுள் டிஜிட் பொருளாதார வளர்ச்சியைச் சாதித்துள்ளது என்பது நினைவில் இருக்கட்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

Source link