சென்னை: தனியார் ரயில்வே தடங்கள் வைத்திருக்கும் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜ முன்னாள்

சென்னை: தனியார் ரயில்வே தடங்கள் வைத்திருக்கும் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

கரூர் மாவட்டம், க.பரமத்தியில், வி.எஸ்.பி., பொறியியல் கல்லுாரி பஸ் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில், 24 பேர் காயமடைந்தனர். இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டம் ஜல்லிப்பட்டி அருகே, தனியார் ஆளில்லா ரயில்வே கிராசிங்கில், கல்லூரி பஸ் மீது சரக்கு ரயில் மோதிய செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.

விபத்தில் காயமடைந்த மாணவ, மாணவியர்கள் அபாயகட்டத்தில் இருந்து வெளிவந்து விட்டார்கள் என்ற செய்தி மனநிம்மதி அளிக்கிறது. அவர்கள் அனைவரும் விரைவில் பூரண நலம்பெற, இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.

இது போன்ற நிகழ்வுகள் மிகவும் துரதிருஷ்டவசமானது. மேலும் இது போன்ற நிகழ்வுகள் எங்கும் ஏற்படாமல் தடுக்க, தனியார் ரயில்வே தடங்கள் வைத்திருக்கும் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

விபத்து குறித்த செய்தி அறிந்ததும் உதவிய பொதுமக்களுக்கும், உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று, மாணவ மாணவியரைச் சந்தித்து, ஆறுதல் கூறிய, தமிழக பாஜ கரூர் மாவட்ட நிர்வாகிகளுக்கும், எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

Source link