சென்னை: 'தன் சொந்த எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்ய, இந்தியாவுக்கு ஏன் மற்றொரு நாட்டின் ஒப்புதல்' என,

சென்னை: ‘தன் சொந்த எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்ய, இந்தியாவுக்கு ஏன் மற்றொரு நாட்டின் ஒப்புதல்’ என, முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் அறிக்கை:

ரஷ்யாவில் இருந்து, 30 நாட்களுக்கு மட்டுமே இந்தியா எண்ணெய் வாங்க, அமெரிக்கா முடிவு செய்யும்போது, அது ஒரு அடிப்படை கேள்வியை எழுப்புகிறது. தன் சொந்த எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்ய, இந்தியாவுக்கு ஏன் மற்றொரு நாட்டின் ஒப்புதல்?

விசாகப்பட்டினத்தில் இந்தியா நடத்திய சர்வதேச கடற்படை மதிப்பாய்வு பயிற்சியில் பங்கேற்ற உடனேயே, ஆயுதம் ஏந்தாத ஈரானிய போர்க் கப்பலை, அமெரிக்கா மூழ்கடித்ததும் கவலை அளிக்கிறது.

பன்னாட்டு பயிற்சியின் ஒரு பகுதியாக, இந்தியாவிற்கு வந்த ஒரு கப்பல், அத்தகைய விதியை சந்திக்கும்போது, இந்தியா அமைதியாகவோ அல்லது செயலற்றதாகவோ தோன்ற முடியாது.

இந்தியாவின் நீண்ட கால மூலோபாய சுயாட்சி மற்றும் சுதந்திரமான வெளியுறவு கொள்கையின் பாரம்பரியத்தில், மத்திய பா.ஜ., அரசு முற்றிலும் சமரசம் செய்ததாக தெரிகிறது.

சர்வதேச அரங்கில் இந்தியாவின் கண்ணியம் பாதுகாக்கப்பட வேண்டும். நாட்டின் இறையாண்மை மற்றும் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link