சென்னை: '' தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது,'' என தமிழக உள்துறை

சென்னை: ” தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது,” என தமிழக உள்துறை செயலர் தீரஜ்குமார் கூறியுள்ளார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து உள்துறை செயலர் தீரஜ்குமார், சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன், சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உள்ளிட்டோர் இணைந்து நிருபர்களை சந்தித்தனர்.

அப்போது தீரஜ்குமார் கூறியதாவது: தமிழகத்தில் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. குற்றங்கள் குறித்து தவறான தகவல் பரப்பப்படவதால் ஆதாரங்களுடன் விளக்கம் தருகிறோம்.திருட்டு, பலாத்கார வழக்குகளில் எண்ணிக்கை குறைந்துள்ளது.

2021ல் தமிழகத்தில் 1597 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது தொடர்ந்து குறைந்து வருகிறது. 2024 ல் 1490 வழக்குகளும் 2025 ல் 1461 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

பலாத்கார வழக்குகளும் குறைந்துள்ளன. 2021ல் 422 பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த எண்ணிக்கை 2025 ல் 401 ஆக உள்ளது.

பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் கூறியதாவது: பெரிய குற்றங்கள், வழக்குகள் புகார் செய்வது குறைந்துள்ளது. சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர , பெரிய நிகழ்ச்சிகள், கோவில் திருவிழாக்களுக்கு போலீஸ், அரசு இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளோம். கடந்த 5 ஆண்டுகளில் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. போலீசை பொறுத்தவரை குற்றங்கள் பெரியது அல்லது சிறியது என இருந்தாலும் அதனை கண்டுபிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் குற்றங்களை புகார் அளிக்கசெய்ய வேண்டும் என மக்களிடம் சொல்கிறோம். பத்தாண்டுகளுக்கு முன்பு வந்தது போக்சோ சட்டம். அது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது. அரசின் அணுகுமுறையால், போலீஸ், பள்ளிகல்வித்துறை சமூக நலத்துறை சேர்ந்து போக்சோ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.

குழந்தைகளை தவறாக ஆசிரியர்கள் தொட்டால் தைரியமாக வந்து சொல்கின்றனர். இது 10 ஆண்டுகளுக்கு முன்பு நடக்கவில்லை. சில குற்றங்கள் போக்சோவில் வருகிறது. ஜாதி பெயர் சொன்னாலும் எஸ்சி எஸ்டி வழக்கு பதிவு செய்கிறோம்.இந்த சட்டங்களில் போலீசும், அரசும் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளோம். இதனால் புகார்கள் வருகிறது. இதனை விசாரிக்க வேண்டும் எனக்கூறியுள்ளோம். புள்ளி விவரத்தை பற்றி கவலைப்படாமல் விசாரிக்க வேண்டும் எனக்கூறியுள்ளோம். இதனால், போக்சோ மற்றும் எஸ்சி எஸ்டியில் வழக்குகள் பதிவாகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

ஏன் இந்த திடீர் பேட்டி

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து பாலியல் பலாத்காரம், வன்கொடுமை செய்து கொலை என்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. தேர்தல் நேரத்தில் இவை மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அரசு தரப்பினருக்கு ஏற்பட்ட அச்சமே இந்த பேட்டிக்கு காரணம் என்கின்றனர், அரசியல் கட்சியினர்.

Source link